கொரோனா காலத்தில் உதவியவரின் மகள் திருமண வரவேற்பு விழா.. 504 கிடாக்கள், ஆளுயர குத்துவிளக்கு உட்பட பல சீர்பொருட்கள் வழங்கிய கிராம மக்கள்..!
கொரோனா காலத்தில் உதவியவரின் மகள் திருமண வரவேற்பு விழா.. 504 கிடாக்கள், ஆளுயர குத்துவிளக்கு உட்பட பல சீர்பொருட்கள் வழங்கிய கிராம மக்கள்..!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், 504 கிடாய், குத்துவிளக்கு உட்பட பலவற்றை கிராம மக்கள் சீராக வழங்கினர்.
எஸ்.புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்.மணி பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ளார். கடந்த கொரோனா காலத்தின் போது, அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கி பாஸ்கரன் உதவி செய்தார்.
இந்நிலையில் அவரது மகள் திருமண வரவேற்பு விழாவிற்கு, தப்புத்தாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து, சீர் வரிசை பொருட்களை கிராம மக்கள் கொண்டு சென்றனர்.
Comments