8 ஆண்டுகளுக்குப் பிறகு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு வந்த முதல் வணிக சரக்குக் கப்பல்..!

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு வந்த முதல் வணிக சரக்குக் கப்பல்..!
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வணிக சரக்குக் கப்பல் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2015-ம் ஆண்டு ஈரானின் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியா தலைமையிலான ராணுவக் கூட்டணிக்கும் இடையே மோதல் தொடங்கியதற்கு பிறகு தற்போது கப்பல் வந்துள்ளது.
ஹொடைடா துறைமுகத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட வகை ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில், தற்போது அனைத்து வகையான ஏற்றுமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments