ஜி.டி.நாயுடு அறிவியல் மையத்தில் ரூ.20 கோடியில் புதிய சாதனங்கள்..!

அமெரிக்கா, ஜெர்மன் நாடுகளிலிருந்து பெறப்பட்ட சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான அறிவியல் சாதனங்கள் கோயம்புத்தூரில் உள்ள ஜி டி நாயுடு வளாகத்தில் எக்ஸ்பிரிமெண்டா கலந்தாய்வு என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக ஜிடி நாயுடுவின் மகன் ஜிடி கோபால் கூறினார்.
40 ஆயிரம் சதுர அடியில் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் மையத்தில் சர்வதேச தரத்திற்கு இணையாக 120 கலந்தாய்வு அறிவியல் பரிசோதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஜிடி கோபால், பிப்ரவரி 28ம் தேதி முதல் இந்த அறிவியல் மையத்தை மாணவ-மாணவிகள் பார்வையிடலாம் என்றும் கூறினார்.
Comments