அமைச்சர்கள் விமானங்களில் பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க பாகிஸ்தான் தடை விதிப்பு..!

0 1104

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், தனது நாட்டின் அமைச்சர்கள் விமானங்களில் பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், வெளிநாடுகளில் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் தடை விதித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நிதி ஆணையத்திடமிருந்து 650 கோடி அமெரிக்க டாலரை ($6.5 billion) கடனாக கேட்டுள்ள நிலையில், கூடுதல் வரி விதிப்பு, சலுகைகள் ரத்து உள்ளிட்டவைகளை நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்து வரும் பாகிஸ்தான் அரசு, மத்திய-மாநில அமைச்சர்களின் சம்பளம், சலுகைகளையும் குறைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments