ராஜூ பாய்க்கே டஃப் கொடுத்த பொன்முடி.. பிரச்சாரத்தில் ஒரே சிரிப்பலை..!

0 2302
ராஜூ பாய்க்கே டஃப் கொடுத்த பொன்முடி.. பிரச்சாரத்தில் ஒரே சிரிப்பலை..!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை நேரில் சந்தித்து கலாய்த்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, காலையில் பிரச்சாரம் முடிந்ததும் ஒரு சிறிய உணவகத்தில் வந்து அமர்ந்தார். கடை உரிமையாளரான பெண்ணிடம் , தான் வீட்டில் காலை உணவாக ஒரே ஒரு முட்டை தோசை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வேன் என்றும் இங்கு தோசை ருசியாக இருப்பதாக கூறி கூடுதலாக ஒரு தோசை வாங்கிச் சாப்பிட்டார்.

இரு தினங்களுக்கு முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அந்த வழியாக காரில் வந்த பொன்முடியிடம் வாக்கு கேட்டு கலகலப்பூட்டினார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு செல்லூர் ராஜூ ஒரு வீட்டில் வாக்கு சேகரித்துக் கொண்டிருப்பதை பார்த்த பொன்முடி நேரடியாக அங்கு சென்று அம்மா ஓட்டு போடுங்கம்மா... அவரே எங்களுக்கு தான் ஓட்டு போடுவாரும்மா என்று செல்லூர் ராஜுவை ஜாலியாக தட்டிக் கலாய்த்தார்.

செல்லூர் ராஜூ சிரித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த வாக்காளர்களிடம் அவரு சின்னத்துக்கு வாக்களிக்காதீங்க , கைசின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் பொன்முடி. சிரிப்பலையுடன் அதிமுக - திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

ஈரோடு கிழக்கில் ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சிக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் , மறுபக்கம் திமுக அமைச்சரும், அதிமுக முன்னாள் அமைச்சரும் ஜாலியாக கலாய்த்துக் கொண்ட சம்பவம் தொண்டர்களை வாய் விட்டு சிரிக்க வைத்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments