வாடிக்கையாளரின் பெயரில் போலியாக கடன் வழங்கி ரூ.28 லட்சம் மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளர் கைது.!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கடன் வழங்கி மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
புதுநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் மேலாளராக இருக்கும் சரவணன் போலியான பெயர்களில் கால்நடைக் கடன், கரும்பு பயிர்க்கடன், சேமிப்புக் கடன் உள்ளிட்ட கடன்களை வழங்கி , அந்த பணத்தை தனது நண்பரின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வங்கி நிர்வாகம் சிறப்பு தணிக்கை நடத்தியதில் கடந்த நான்கு ஆண்டுகளில் சரவணன் இது போன்று சுமார் 28 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments