9 வயது சிறுமி உள்பட 3 பேரை சுட்டுக்கொன்ற இளைஞர் கைது

அமெரிக்காவில், 9 வயது சிறுமி உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
புளோரிடாவைச் சேர்ந்த மெல்வின் மோசஸ், முதலில் இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
போலீசாரும், பத்திரிக்கையாளர்களும் அங்கு விரைந்த நிலையில், மற்றொரு வீட்டிற்குள் புகுந்த மெல்வின் அங்கிருந்த 9 வயது சிறுமியையும், அவரது தாயாரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின், அங்கு செய்தி சேகரித்து கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை நோக்கி சுட்டதில், ஒருவர் உயிரிழந்தார். மெல்வினை போலீசார் கைது செய்தனர். முதலில் கொல்லப்பட்ட இளம்பெண்ணுடன் முன்விரோதம் இருந்த நிலையில், மற்றவர்களை ஏன் சுட்டான் என போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Comments