தலைமைச் செயலகத்துக்கு சைக்கிளில் சென்ற பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ்..!

பீகார் தலைமைச் செயலகத்துக்கு சைக்கிளில் சென்ற அம்மாநில அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ், மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் தனது கனவில் வந்ததாகவும் தாமும் அவரும் சைக்கிளில் பயணித்து அவர் பிறந்த கிராமத்துக்குச் சென்றதாகவும் வினோத விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதலமைச்சரான லாலு பிரசாத் யாதவ்வின் மகனான தேஜ் பிரதாப் யாதவ், பீகாரின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
காலை திடீரென பாதுகாவலர்களுடன் சைக்கிளில் தலைமைச் செயலகம் சென்ற அவர், கனவில் வந்த முலாயம் சிங் யாதவ் தன்னை ஆரத்தழுவி ஆசீர்வதித்ததாகக் கூறினார்.
அவரால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் வாழ்நாள் முழுவதும் அவரது வழியைப் பின்பற்ற முயற்சிப்பதாகவும் தேஜ் பிரதாப் யாதவ் கூறினார்.
Comments