உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: 3 தங்கத்துடன் இந்தியா முதலிடம்.!

0 5880

எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் 16க்கு 8 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியின் மேக்ஸிமிலியன் உல்பெர்க்கை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

ஏற்கனவே, கலப்பு அணிகள் பிரிவில் ருத்ராங்ஷ் பாட்டீல் நர்மதா நிதினுடன் இணைந்து தங்கம் வென்றிருந்தார். மற்றொரு பிரிவில் வருண் தோமர்-ரிதம் சங்வான் இணை தங்கம் வென்றிருந்ததால் இந்தியாவின் தங்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் வருண் தோமர் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments