பழைய பர்னிச்சர்களை வரதட்சணையாக கொடுக்க முயன்றதாகக் கூறி திருமணத்தை நிறுத்திய மணமகன்..!

0 3027

தெலுங்கானாவில் பழைய ஃபர்னிச்சர்களை வரதட்சணையாக கொடுக்க முயன்றதாகக் கூறி, கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் மீது மணப்பெண் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, மணப்பெண்ணின் உறவினர் மண்டபத்தில் காத்திருந்த நிலையில், மணமகன் வரவில்லை.

காரணம் கேட்டபோது, அவர்கள் தன்னை அவதூறாகப் பேசியதாகவும் வரதட்சணையாகக் கொடுக்க கொண்டுவரப்பட்டிருக்கும் பர்னிச்சர்கள் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பர்னிச்சர்கள் என்றும் கூறி, திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் பெண்ணின் தந்தை போலீசில் புகாரளித்தார்.

இதனையடுத்து மணமகன் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments