நாட்டுப் படகில் சவாரி சென்ற 2 பெண்கள் கடலில் மூழ்கி பலி.. மீட்க கடலில் குதித்தவரும் உயிரிழப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் கடலில் படகு சவாரி செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தில் அனுமதியின்றி நாட்டுப் படகில் சவாரி அழைத்துச் சென்றதாக படகு உரிமையாளர் மற்றும் படகோட்டி கைது செய்யப்பட்டனர்.
மதுரை நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 38 பேர் மகா சிவராத்திரியையொட்டி, கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி அய்யனார் கோவிலுக்கு வேனில் சென்றனர்.
நேற்று காலை தேவிபட்டினம் உலகம்மாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து, கடலில் பாதுகாப்பு உகபரணங்கள் இல்லாமல் படகு சவாரி சென்றுள்ளனர்.
நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்த மணிமேகலை, இருளாயி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களை மீட்க கடலில் குதித்த 3 பேரில் இருவர் கரை திரும்பிய நிலையில், மாயமான முத்துமணி என்பரின் சடலம் இன்று கரை ஒதுங்கியது.
Comments