வடமாநில ரயில் பயணிகளை தாக்கி பிரதமரை அவதூறாக பேசிய நபர் கைது..!

சென்னையில் இருந்து சென்ற வைகை விரைவு ரயிலில் வட இந்திய ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய நபர், பிரதமர் மோடியை அவதூறாக பேசும் வீடியோ இணையங்களில் பகிரப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தியவரை ரயில்வே போலீசார் விழுப்புரத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான மகிமை தாஸ் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பதும், சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.
விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகிமைதாஸை சென்னை சென்ட்ரல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments