பெண்ணின் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டிய விவகாரத்தில், மேலும் 2 ரவுடிகள் கைது..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெண் ஒருவரின் கழுத்தில் வீச்சரிவாளை வைத்து ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது தொடர்பான விவகாரத்தில், மேலும் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
கருமலை கூடலை சேர்ந்த ராஜா, வேலைக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், மனைவி வெண்ணிலா மற்றும் மருமகள் சுகந்தி ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ரவுடிகள் லல்லு என்கிற வல்லுபிரசாத், அவரது மனைவி கோமதி, விஜய் என்கிற வெள்ளையன் ஆகியோர் வீச்சரிவாளை வெண்ணிலா கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனர்.
உடனடியாக அவர் சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற ஓடி வந்தனர். இதைகண்டு 3 பேரும் தப்பியோடிய நிலையில், கோமதியை மட்டும் பிடித்து பொதுமக்கள் ஒப்படைக்கவே, அவரை கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் போலீசார் அடைத்தனர்.
தப்பி சென்ற லல்லுபிரசாத், வெள்ளையன் ஆகியோரை கைது செய்ய முயன்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கால்களில் முறிவு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments