மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கொலை செய்த கணவர் கைது..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோயில் தாலுகா கீழக்கரை கொப்படி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கும், இன்பவள்ளிக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்ச்செல்வன் கேரளாவில் ஆயுர்வேதிக் மெடிக்கல் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஊர் திரும்பிய அவர், மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்து தகராறு செய்துள்ளார்.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Comments