தானம் செய்ய வைத்த குருவே இவர்தான்.. மனம் திறந்த மயில்சாமி..!

0 9532
தானம் செய்ய வைத்த குருவே இவர்தான்.. மனம் திறந்த மயில்சாமி..!

எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து தனக்கு தானம் செய்யும் குணம் வந்ததாகவும், கையில் காசு இல்லாத நேரம் யாராவது உதவி கேட்டு வந்தால் கொடுக்க முடியவில்லையே என்று கஷ்டமாக இருக்கும் என்றும் நடிகர் மயில்சாமி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மதுப்பழக்கம் குறித்து மறைந்த நடிகர் மயில்சாமி வெளிப்படையாக தெரிவித்திருந்தார்....

அது போல எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களையும் திரும்ப திரும்ப பார்த்ததால், தானம் செய்யும் குணம் வந்ததாக தெரிவித்திருந்த மயில்சாமி, கையில் பணமில்லா நேரங்களில் யாராவது உதவி கேட்டு வந்தால் கொடுக்க இயலவில்லையே என்று கடவுளை திட்டி விடுவேன் என்று கூறியிருந்தார்...

தனது வீட்டிற்கு நல்லவன் வாழ்வான் என்று நடிகர் விவேக் பெயர் வைத்த சுவாரஸ்ய நிகழ்வையும் மயில்சாமி பகிர்ந்து கொண்டிருந்தார்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments