ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் போக்குக் காட்டிய சரக்கு வாகனத்திற்கு ரூ.11,000 அபராதம்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் போக்குக் காட்டிய சரக்கு வாகனத்திற்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
புலியூர்குறிச்சி - வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செஜின் மற்றும் அந்தோணி என்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து இருவரும் 108 ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது ஆம்புலன்சுக்கு முன்னால் சென்ற சரக்கு வாகனம் வழிவிடாமல் சென்றது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதனை வீடியோவாக எடுத்து குளச்சல் போக்குவரத்து காவலர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற ஐயப்பன் என்பவருக்கு போலீசார் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
Comments