அனுமதியின்றி கடலுக்குள் படகுசவாரி சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் அனுமதியின்றி கடலுக்குள் படகுசவாரி சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கமுதி அருகே பாக்குவெட்டி அய்யனார் கோயிலுக்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உள்பட 38 பேர் வந்திருந்தனர்.
தொடர்ந்து தேவிபட்டினம் உலகம்மாள் கோயிலுக்குச் சென்ற அவர்கள், அனுமதியின்றி 3 நாட்டுப் படகுகளில் கடலுக்குள் சுற்றுலா சென்றனர்.
அப்போது கடலில் ஏற்பட்ட அலையால் ஒரு படகு குலுங்கியதில் மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த மணிமேகலை மற்றும் அவரது உறவினர் இருளாயி ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களைக் காப்பாற்ற கடலுக்குள் மூவர் குதித்த நிலையில் இருவர் கரையை வந்தடைந்தனர். கடலுக்குள் மூழ்கிய முத்துமணி என்பவரை தேடி வருகின்றனர். அனுமதியின்றி படகை இயக்கிய சுந்தர் கைது செய்யப்பட்டார்.
Comments