நியூசிலாந்தில் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வு..!

நியூசிலாந்தில் கேப்ரியல் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நியூசிலாந்தின் வடக்குத்தீவு பிராந்தியங்களை, கடந்த 12-ஆம் தேதி தாக்கிய புயலுக்குப்பின், 6 ஆயிரத்து 431 பேரை காணவில்லை என்றும், 3 ஆயிரத்து 216 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்.
வெள்ளத்தால் ஏராளமான விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும், மழைநீர் மற்றும் சகதி காரணமாக சரக்குப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments