ஜிம்மில் பாலியல் தொந்தரவு அளித்தவனை அடித்து விரட்டிய இளம்பெண்.. 'பெண்கள் மனம் தளராமல் போராட வேண்டும் என தெரிவிப்பு'..!

ஜிம்மில் பாலியல் தொந்தரவு அளித்தவனை அடித்து விரட்டிய இளம்பெண்.. 'பெண்கள் மனம் தளராமல் போராட வேண்டும் என தெரிவிப்பு'..!
அமெரிக்காவில், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவனை, இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் ஒருவர் அடித்து விரட்டும் காணொலி, இணையத்தில் வைரலாகியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பின் ஜிம்-மில் தனியாக உடற்பயிற்சி செய்த நஷாலி அல்மாவை, அங்கு வந்த ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றான்.
தப்பியோடிய நஷாலியை, அவன் துரத்திச்சென்று, தரையில் தள்ளித்தாக்கினான். அவனது பிடிக்கு விட்டுக்கொடுக்காமல் நஷாலியும் பதிலுக்குத் தாக்கியதால், அவன் பின்வாங்கினான். போலீசார் அவனை பின்னர் கைது செய்தனர்.
இதுபோன்ற தருணங்களில், பெண்கள் மனம் தளராமல் போராட வேண்டும் என நஷாலி தெரிவித்துள்ளார்.
Comments