நடிகை அனுஷ்காவுக்கு விசித்திரமான நோய்.. படப்பிடிப்பு நிறுத்தம்.. சிரிப்புத்தான் பிரச்சனையே...!
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கிய நடிகை அனுஷ்கா, சிரிப்பை அடக்க இயலாமல் தவிக்கும் வினோத நோயால் அவதிப்படுவதால் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். நடிகை சமந்தாவை தொடர்ந்து, அனுஷ்காவை தாக்கி உள்ள விசித்திர நோய் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..!
ப்ரண்ட்ஸ் படத்தில் சிரிப்பை அடக்க இயலாமல் தவிக்கு விஜய்யை போல நிஜத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் நடிகை அனுஷ்கா..! தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகில் சிம்ரனுக்கு அடுத்த படியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த கொடியிடை கொண்ட கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா..!
பாகுபலி 2 க்கு பின்னர் உடல் பருமன் காரணமாக சைலன்ஸ், ஜதி ரத்னலு படங்களை தவிர சொல்லிக் கொள்ளும் அளவுக்கான படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அனுஷ்கா, சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் உடல் எடையை குறைத்து புதிய படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் நேர்கானல் ஒன்றில் தனக்கு விசித்திரமான நோய் ஒன்று இருப்பதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்
தான் சிரிக்க தொடங்கினால் , அதனை நிறுத்த இயலாமல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தவிக்கும் நிலையில் உள்ளதாகவும், சில நேரங்களில் தனது சிரிப்பை அடக்க இயலாத காரணத்தால் பல முறை படப்பிடிப்பு கூட நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அனுஷ்கா
நீண்ட நாட்களாக தனக்கு இருந்து வரும் , இந்த பிரச்சனை தொடர்பாக மருத்துவரை சந்தித்த போது, சிரிப்பை அடக்க இயலாதது ஒரு விசித்திரமான நோய் என்று கூறியதாகவும், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் நடிகை அனுஷ்கா வேதனை தெரிவித்தார்
ஏற்கனவே நடிகை சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் மையோசிடிஸ் போன்ற வினோத நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் முன்னனி நடிகையான அனுஷ்காவும் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
Comments