''உலகளவில் தண்ணீர் பிரச்னை தலைதூக்கியபோது, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு இந்தியாவில் தொடக்கம்..'' - பிரதமர் மோடி..!

பூமியில் குறிப்பிட்ட அளவே நீர்இருப்பு உள்ளதால், தண்ணீரின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணர்ந்திருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்தவாறே காணொலி வாயிலாக, ராஜஸ்தானின் சிரோகியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சர்வதேச அளவில், தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை தலைதூக்கியபோது, ஜல் சக்தி அபியான் எனும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், கடந்த 2021 ஆம் ஆண்டில், நம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில், தண்ணீரை சேமிப்பது, குடிமக்களாகிய நமது கடமை என அறிவுறுத்திய பிரதமர் மோடி, இது அனைவரது கூட்டு பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
Comments