திரிபுரா மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று 60தொகுதிகளுக்கு தேர்தல்..!

திரிபுரா மாநிலத்தில் 60தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.
மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 3ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்தியப் படைகளைச் சேர்ந்த 25 ஆயிரம் பேரும் மாநில காவல் துறை மற்றும் ஆயுதப் படைப் பிரிவைச் சேர்ந்த 31ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் .
வருகிற மார்ச் 2-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
Comments