சிரியாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு எல்லையில் இரு பகுதிகளை திறந்து விடுவதாக அறிவித்தார் அதிபர் பஷார்..!

சிரியாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு எல்லையில் இரு பகுதிகளை திறந்து விடுவதாக அந்நாட்டு அதிபர் பஷார் அறிவித்திருக்கிறார்.
சிரியாவில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளைக் கொண்டு செல்வதில் சுணக்கம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸில் ஐ.நா. பிரதிநிதிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே, துருக்கி - சிரிய எல்லையில் உள்ள இரு பகுதிகளை மூன்று மாதங்களுக்கு திறந்துவிடுவதாக சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத் சம்மதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments