துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவித்த ஐந்து பேர் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு..!

துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவித்த ஐந்து பேர் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர்.
தெற்கு நகரமான ஹடேயில் நிலநடுக்கம் ஏற்பட்டு 204 மணி நேரத்திற்கு பிறகு இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணும், ஆணும் மீட்கப்பட்டதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, 198 மணி நேரத்திற்கு பிறகு, தென் துருக்கியில் இடிபாடு குவியலுக்குள் சிக்கியிருந்த 18 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே, கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து இரண்டு சகோதரர்களை மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டனர்.
Comments