மாணவர்களை தாக்கியதாக வட மாநில தொழிலாளர்களை நையப்புடைத்த சம்பவம்..! ஆர்.வி எஸ்.கல்லூரியில் கலவரம்

0 3314

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆர்.வி.எஸ் கல்லூரி கேண்டீனில் கோழிக்கறி கேட்ட மாணவர்களை தாக்கியதாக, வடமாநில ஊழியர்களை டிராக்டருடன் வைத்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவத்தால் கல்லூரி வளாகம் போர்க்களமானது.

கோவை மாவட்டம் சூலூரில் ஆர் வி எஸ் கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

திங்கட்கிழமை இரவு இங்குள்ள உணவு விடுதியில் உணவருந்த சென்ற மாணவர்கள் சிலர் கோழிக்கறி கூடுதலாக வழங்குமாறு உணவு பறிமாறிய வடமாநில தொழிலாளர்களிடம் கேட்டுள்ளனர். வழங்க மறுத்ததால் உண்டான வாக்குவாதத்தில் வட மாநில தொழிலாளர்களை சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகின்றது .

சம்பவம் நடந்த போது 700க் மேற்பட்ட மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்ததால் , வட மாநில தொழிலாளர்கள் அடி வாங்கிக் கொண்டு மாணவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி ஓடினர்.

ஓடிச்சென்றவர்கள் கல்லூரியில் பணியாற்றும் மற்ற வட மாநில தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்த ஒன்று திரண்டு வந்தவர்கள் மாணவர்களை திருப்பி தாக்கியதால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது..

தாக்குதலை சமாளிக்க முடியாமல் டிராக்டரில் ஏறி தப்பிக்க நினைத்து வசமாக சிக்கிய வட மாநில தொழிலார்களை பிடித்து வைத்து மாணவர்கள் நையப்புடைத்தனர்..

கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை எடுத்து வீசியும், அங்கிருந்த மரங்களை உடைத்தும் தாக்கி கொண்டதால் கல்லூரி வளாகம் போர்க்களமாக மாறியது. இதனை அடுத்து அங்கு வந்த சூலூர் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த மோதல் சம்பவத்தில் 6 மாணவர்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் ஆர் வி எஸ் கல்வி குழுமத்தின் குமரன் கோட்டம் கோவிலின் பூசாரியான ஹரிஹரன் என்பவரது மனைவி சுதா என்பவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கலவரம் சூலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments