தனியார் பேருந்தில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர்களை வேறொரு பேருந்தில் அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்..!

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தலில் தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களை கீழே இறக்கிய மாவட்ட ஆட்சியர் அவர்களை வேறொரு பேருந்தில் அனுப்பி வைத்தார்.
நேற்று மாலை தரங்கம்பாடி பகுதியில் ஆய்வுமேற்கொள்ள சென்றிருந்த ஆட்சியர் மகாபாரதி, செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில், மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணித்ததை பார்த்து, பேருந்தை நிறுத்தினார்.
மாணவர்களுக்கு அறிவுரை கூறிய ஆட்சியர், வேறொரு பேருந்தை வரவழைத்து அவர்களை அதில் அனுப்பி வைத்த ஆட்சியர், கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Comments