போலீசாக நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: மேலும் ஒரு பெண் கைது..!

போலீசாக நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: மேலும் ஒரு பெண் கைது..!
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு நகை வாங்க வந்த வியாபாரிகளிடம் போலீஸாக நடித்து ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திராவின் பாப்பட்டலா மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பாராவ், ரஹ்மான் ஆகியோர் பிப்ரவரி 2ம் தேதி நகை வாங்குவதற்காக சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்த கும்பல் தங்களை போலீஸ் எனக்கூறி அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இதுதொடர்பாக யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியான இம்ரான் உட்பட மூன்று பேரை கைது செய்து சுமார் 60 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த நிலையில் தற்போது, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மும்தாஜ்ஜை கைது செய்து 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
Comments