தனியார் ஆஸ்ரமம் மீது புகார்.. 4 ஊழியர்கள் கைது.. தலைமறைவான தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு..!

0 2055
தனியார் ஆஸ்ரமம் மீது புகார்.. 4 ஊழியர்கள் கைது.. தலைமறைவான தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு..!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் இயங்கி வரும் தனியார் ஆஸ்ரமம் மீது புகார் எழுந்துள்ள நிலையில் அதன் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள ஆஸ்ரம உரிமையாளரையும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர்.இந்த ஆசிரமத்தின் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது மனநலம் குன்றியோர்,ஆதரவற்றோர் உள்ளிட்ட 16 பேர் மாயமானதும், ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அம்பலமானது.

இதையடுத்து ஆஸ்ரம ஊழியர்கள் 4 பேரை கைது செய்த போலீசார்,தலைமறைவாக உள்ள உரிமையாளர் அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபினை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments