ஆண்நண்பரின் மிரட்டல் காரணமாக திருமணமான பெண் தற்கொலை... விசாரணைக்குப் பயந்து மிரட்டல் விடுத்தவரும் தற்கொலை

கோயமுத்தூரில், ஆண்நண்பரின் மிரட்டல் காரணமாக திருமணமான பெண் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், மிரட்டல் விடுத்தவரும் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துக் கொண்டார்.
வெள்ளலூரைச் சேர்ந்த பெயிண்டரான சலீம், தன்னைப் போன்று திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள போத்தனூரைச் சேர்ந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் அப்பெண், தகாத உறவை துண்டிக்க முற்பட்ட போது தன்னுடன் இருந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக சலீம் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அப்பெண் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், சலீம் மீது நடவடிக்கை எடுக்க பெண்ணின் உறவினர்கள் போத்தனூர் போலீஸில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சலீமும் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
Comments