ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

0 2026

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி இன்று நடைபெற்றது.

ஏற்கனவே 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக 1,100 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவை சரிபார்க்கப்பட்டன.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் வீதம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே 77 வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments