ஓடும் லாரியில் மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

புதுக்கோட்டை அருகே மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரியில் பின்பக்கமாக ஏறி தார் பாயைக் கிழித்து மது பாட்டில்களை களவாடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கல்லாக்கோட்டையில் செயல்பட்டுவரும் தனியார் மது ஆலையில் இருந்து தினந்தோறும் மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் லாரி மூலம் கொண்டு சென்று விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோமாபுரம் அருகே லாரியை பின் தொடர்ந்த சிலர், லாரி மெதுவாகச் சென்றபோது பின்பக்கமாக ஏறி உள்ளே இருந்த மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
Comments