உக்ரைனில் அடுத்த சில தினங்களில் பிரமாண்டத் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்?

உக்ரைனில் அடுத்த சில தினங்களில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜீரோ டே என புதின் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலுக்காக சுமார் ஆயிரத்து 800 டேங்குகள், 700 விமானங்கள் மேலும் 5 லட்சம் படை வீரர்களைத் திரட்டி வருவதாகவும், இன்னும் 10 நாட்களில் இந்தத் தாக்குதல் தொடங்கக்கூடும் என்றும் அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக ரஷ்யா ஏராளமான அளவில் வெடிமருந்துகளை சேமித்து வைத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Comments