சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்ததாக விஞ்ஞானிகள் தகவல்
சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய பகுதி உடைந்து, அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும் புயலைப் போல் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் வட துருவத்தின் மேல் நெருப்பு சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்க, பூமிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக பதிவு செய்யப்பட்ட அந்தக் காட்சியை விண்வெளி ஆராய்ச்சியாளர் தமிதா ஸ்கோவ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Comments