புதுச்சேரி வேளாண்துறை சார்பில் ரோடியர் திடலில் இன்று முதல் மலர், காய் கனி கண்காட்சி..!

புதுச்சேரியில், வேளாண்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர், காய், கனி கண்காட்சியை, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
ரோடியர் மில் திடலில், வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில், கசேனியா, டைலார்டியா உட்பட 33 ஆயிரம் மலர் செடிகள் மற்றும் அலங்கார பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்களை கவரும் வகையில், ரோஜாக்கலால் அலங்கரிக்கப்பட்ட யானை, அன்னாசியால் உருவாக்கப்பட்ட முதலை உள்ளிட்டவை காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
Comments