ரஷ்யா ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் ஆர்வமுடன் சுரங்க ரயில் நிலையங்களில் பாடங்களை கற்ற மாணவர்கள்..!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியதால், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் வைத்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை காலை தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேலாக வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆபத்து காலங்களில் மக்கள் தஞ்சமடையும் இடமான சுரங்க மெட்ரோ நிலையங்களுக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டு, அங்கேயே அவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை கற்றனர்.
Comments