துருக்கியில் மாயமான பெங்களூருவைச் சேர்ந்தவரைத் தேடும் பணி தீவிரம்..!

துருக்கியில் மாயமான பெங்களூருவைச் சேர்ந்தவரைத் தேடும் பணி தீவிரம்..!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மாயமான பெங்களூருவைச் சேர்ந்தவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சகத்தின் மேற்குப் பகுதி செயலாளர் சஞ்சய் வர்மா, இந்தியர்கள் குறித்த தகவல்களைப் பெற அதானா நகரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் 10 இந்தியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தொலைதூர பகுதிகளில் சிக்கியிருந்தாலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதானாவுக்கு வந்த பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.
Comments