நிவாரணப் பொருட்களுடன் இதுவரை 6 விமானங்களை துருக்கிக்கும், சிரியாவுக்கும் அனுப்பியது இந்தியா..!

நிவாரணப் பொருட்களுடன் இதுவரை 6 விமானங்களை துருக்கிக்கும், சிரியாவுக்கும் அனுப்பியது இந்தியா..!
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 'ஆபரேசன் தோஸ்த்' என்ற பெயரில் சி17 குளோப்மாஸ்டர் விமானங்களில் மருந்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்க இரண்டு மோப்ப நாய்களும் 51 தேசியப் பேரிடர் படை வீரர்களும் துருக்கிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
துருக்கி மற்றும் சிரியாவுக்கு இந்தியா இதுவரை 6 விமானங்களைஅனுப்பி வைத்துள்ளது. துருக்கிக்கு 108 டன்கள் நிவாரணப் பொருட்களும் சிரியாவுக்கு 6 டன்கள் நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக துருக்கி மற்றும் சிரியாவின் அமைச்சர்களுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசித்து வருவதாக இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
Comments