புதுச்சேரியில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்

புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரியாங்குப்பம் ஆர்.கே நகர் மாஞ்சாலை பகுதியை சேர்ந்த பிரவீன் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது, அப்போது பிரவீன் சிறுவன் என்பதால் அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அரியாங்குப்பம் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை ஆனார்.
இந்த நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற பிரவீனை, சாலையோரம் பதுங்கி இருந்த மர்ம கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் போலீசார் பிரவீனின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்
Comments