பட்ஜெட் இயக்குனர் டி.பி. கஜேந்திரன் காலமானார்..!

0 6697

தமிழ் திரை உலகின் பிரபல காமெடி நடிகரும் இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்.

தூத்துக்குடி பொன்னையா பாண்டியன் முத்து லெட்சுமி முத்துராமலிங்கத்தின் வாரிசான கஜேந்திரன் தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய கலை தொண்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

பழம் பெரும் நடிகையான தூத்துக்குடி பொன்னையா பாண்டியன் முத்துலெட்சுமி - முத்துராமலிங்கம் தம்பதியரின் வளர்ப்பு மகன் டி.பி. கஜேந்திரன்.

திரையுலக அறிமுகம் இருந்தாலும், இயக்குனர் சிகரம் பாலசந்தர், குடும்ப இயக்குனர் விசு ஆகியோரிடம் உதவி இயக்குனராக வாழ்க்கையை தொடங்கி, 1985 ஆம் ஆண்டு சிதம்பர ரகசியம் படம் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் டி.பி.கஜேந்திரன்.

வீடு மனைவி மக்கள் படம் மூலம் ஜனரஞ்சகமான இயக்குனராக களமிறங்கிய டி.பி கஜேந்திரனுக்கு ராமராஜனின் நடிப்பில் வெளியான எங்க ஊரு காவல் காரன் மகத்தான வெற்றி படமானது.

கிராமத்துக் கதைகளை காமெடியுடன் சொல்லி ரசிகர்களை கவர்ந்தார்.

அவரது இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான பாண்டி நாட்டு தங்கம் அவரை வெற்றிப்பட இயக்குனராக்கியது.

இளையராஜாவின் இசை தாலாட்டுக்கு ஏற்ப கதையை கோர்ப்பதில் வல்லவர் டி.பி கஜேந்திரன்.

பெண்கள் வீட்டின் கண்கள் படத்தின் மூலம் பெண்களுக்கு கவுரவம் அளித்த டி.பி.கஜேந்திரனின் பாட்டு வாத்தியார் படத்தில் காதலை கவுரவப்படுத்தினார்.

தொடர்ந்து பட்ஜெட் பத்ம நாபன் படம் மூலம் பல மிடில் கிளாஸ் மாதவன்களின் நிலைமைகளை நகைச்சுவையுடன் காட்சிகளாக்கினார்.

நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் கமல் ஹாஸனுடன் பம்மல் கே சம்பந்தம் படத்தில் இயக்குனராகவே நடித்து கலகலப்பூட்டினார்.

ரசிகர்களின் பாராட்டையே விருதுகளாக நேசித்தவர் டி.பி கஜேந்திரன்.

மன்னை விட்டு மறைந்தாலும் அவரது படைப்புகளால் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் இந்த பாண்டி நாட்டு தங்கம்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments