மது போதையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளை.. தட்டிக்கேட்ட காவலரின் காதை கடித்த போதை ஆசாமிகள்..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, மது போதையில், முதல்நிலை காவலரின் காதை கடித்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
இருசப்பன் என்ற அந்த காவலர், இரவு பணிக்காக மேட்டூர் காவல் நிலையம் சென்றபோது, போதை ஆசாமிகள் இருவர் அரசுப்பேருந்தை மறித்து தகராறு செய்துள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட இருசப்பனை, போதை ஆசாமிகள் கல்லால் அடித்ததுடன், அவரை கீழே தள்ளி, காதை கடித்ததாகவும் கூறப்படுகிறது.
இருசப்பன் அளித்த புகாரின்பேரில், கட்டடத் தொழிலாளி சிவசக்தியை கைது செய்த போலீசார், அவனது கூட்டாளி முத்துராஜை தேடிவருகின்றனர்.
Comments