காதலியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது சட்டக் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு..!

0 4979

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர் காதலியுடன் மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது பெண்ணின் தாயார் வந்ததால், அங்கிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதிக்க முயற்சி செய்ததில் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

சின்னக்கொல்லப்பட்டியில் உள்ள தனியார் மத்திய சட்டக்கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவர் சஞ்சய் வேறு சில மாணவர்களுடன் கல்லுரிக்கு அருகில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

அதே பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் மாணவியை சஞ்சய் காதலித்ததாக கூறப்படும் நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாணவியின் வீட்டு மாடிக்கு சென்ற சஞ்சய் செல்போனில் மாணவியை அழைத்து, இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

திடீரென மாணவியின் தாயார் வந்ததால், அதிர்ச்சியடைந்த சஞ்சய் இருட்டில் மாடியின் சுற்றுச்சுவர் வழியாக இறங்க முயற்சிக்கும்போது சுமார் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments