உதவி கேட்ட வியாபாரிகளை கடத்திச் சென்று கத்திமுனையில் பணம் பறித்த ஆட்டோ ஓட்டுனர் கைது..!

தேனியில் கார் டயர் பஞ்சரானதால் உதவி கேட்ட வியாபாரிகளை கடத்திச் சென்று கத்திமுனையில் செல்போன், பணம் பறித்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் சிசிடிவி, கம்ப்யூட்டர் விற்பனைக் கடை நடத்தி வரும் அருண் திவாகரன், நண்பருடன் தேனி வந்து திரும்பிய போது, நள்ளிரவில் கார் பஞ்சராகியுள்ளது.
உதவுவது போல நடித்து இருவரையும் தனது ஆட்டோவில் ஏற்றிச்சென்ற ஆட்டோ ஓட்டுனர் கத்திமுனையில் இருவரிடமும் இருந்து 3 செல்போன்கள், வாட்ச் உள்ளிட்டவற்றை பறித்துள்ளார்.
புகாரின் பேரில், ஆட்டோ ஓட்டுனர் கவுதம் காம்பீர், கதிரேசனை கைது செய்த போலீசார், ரத்த காயங்களுடன் அருண் திவாகரனை மீட்டனர்.
Comments