தென் தமிழக, வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

குமரிக்கடல் மற்றும் இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுவிழக்கக்கூடும் என்பதால், இன்று வட மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments