மகன் உயிரிழந்த முதலாமாண்டு நினைவு நாளில் மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு..!

சிவகாசி அருகே மகன் உயிரிழந்த முதலாமாண்டு நாளில் மகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரிசர்வ்லைன் திருப்பதி நகரை சேர்ந்தவர் 37 வயதான பாண்டிதேவி.
இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டட பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தார். நடக்க முடியாத மாற்றுத் திறனாளி மகன் மற்றும் மகளை கடும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்து வந்தநிலையில், அவரது மகன் கடந்த ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி உயிரிழந்தார்.
தேர்தலின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அவர் வேலை வழங்கக்கோரி கண்ணீர் மல்க கோரிக்கையும் வைத்திருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் பாண்டிதேவிக்கு அங்கன்வாடியில் பணி வழங்கப்பட்ட நிலையில், அவரது மகனின் நினைவு நாளான இன்று, 12-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Comments