வீடு முழுவதும் 'நான் ஒரு பைத்தியம்' என எழுதி வைத்துவிட்டு டிரைவர் தற்கொலை

ஒட்டப்பிடாரம் அருகே, கஞ்சா போதையில் நான் ஒரு பைத்தியம் என எழுதி வைத்துவிட்டு டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கீழமங்கலத்தைச் சேர்ந்த டிரைவரான சுடலைமணி, கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இவருக்கு சுடலை ஈஸ்வரி என்ற மனைவியும், ஒரு மாற்றுத்திறனாளி பெண் குழந்தையும் உள்ள நிலையில், ஈஸ்வரி மீண்டும் கருவுற்று 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கடந்த 26ம் தேதி சுடலைமணி துக்க நிகழ்வில் மது அருந்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், ஈஸ்வரி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கஞ்சா போதையில் நேற்றிரவு சுடலை மணி 'நான் ஒரு பைத்தியம்' என வீட்டின் சுவர் முழுவதும் எழுதி வைத்துவிட்டு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments