இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும்-அண்ணாமலை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவினர் ஒன்றுபட்டு ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அவரது பசுமைவழிச்சாலை இல்லத்தில், பாஜக மேலிட பொறுப்பாளர் உள்ளிட்டோருடன் சென்று, அண்ணாமலை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.சையும் சந்தித்தார்.
இபிஎஸ், ஓபிஎஸ் உடனான சந்திப்பிற்கு பின், தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், சிடி.ரவியுடன் இணைந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கலுக்கு நேரம் இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை, திமுகவை எதிர்க்க தேமுதிகவும், அதிமுகவும் ஒன்றுபடுவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
Comments