ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்த 2 சிறார்களை மீட்ட போலீசார்..!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தனியார் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்து சுற்றி திரிந்த 2 சிறார்களை போலீசார் மீட்டனர்.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுவர்களிடம் ரோந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஊத்துக்கோட்டை தனியார் ஆசிரமத்தில் தங்கி இருந்து படித்து வந்த நிலையில், தங்களுக்கு பிடிக்காததால் அங்கிருந்து தப்பி வந்து விட்டதாக சிறுவர்கள் இருவரும் தெரிவித்தனர்.
விசாரணை முடிவடைந்த பின்னர் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
Comments