ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்.. அந்தியூர் அருகே பயங்கரம்..!

0 2204
ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்.. அந்தியூர் அருகே பயங்கரம்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்து தப்பமுயன்ற இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

போலீசாரின் விசாரணையில் அந்த பெண் குன்னூரை சேர்ந்த ராஹிலா என்பதும், பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

அவரது கழுத்தை அறுத்த இளைஞர் ராஹிலாவின் உறவினர் ஜீவா என்பதும், காதல் தோல்வியால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments