மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம்... மக்கள் அதிர்ச்சி

0 2846

விருத்தாச்சலம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதன் பேரில் நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தபோது, அதில் இளைஞரின் சடலம் அழுகிக் கிடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன், காணாமல்போன ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் என்பவரது மகன் சரவணக்குமார் என்பது தெரியவந்தது.

தீயணைப்புத் துறையினருடன் அங்கு விரைந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார், பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணகுமார் இறப்புக்கு காரணம் என்ன என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments