ஊராட்சி வரவு-செலவு கணக்கு கேட்டவருக்கு நேரில் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்..!

அண்ணனிடம் மோதினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்ட நபருக்கு விருநகர் மாவட்டம் கோபாலபுரம் ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியானது.
ராஜபாளையம் அருகிலுள்ள திருவேங்கடபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான குருசாமி, கோபாலபுரம் ஊராட்சியின் வரவு-செலவு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஊராட்சிமன்றத் தலைவி சுதாவின் கணவர் ஜெயக்குமார், குருசாமி நடத்தி வரும் ஜெராக்ஸ் கடைக்கேச் சென்று அவரை மிரட்டியதாக வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்படுள்ளது.
Comments